கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த் குமார் திறந்து வைத்தார் இந்தியாவின் முன்னணி நான்கு பரிசோதனை நிறுவனங்களில் ஒன்றாக நியூபெர்க் டயாக்னாஸ்டிக்ஸ் திகழ்கிறது. இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 150 கிளைகளையும் 2000-க்கும் மேற்பட்ட தொடர்பு மையங்களையும் கொண்டுள்ளது.
விரிவாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில், கோவை டாடாபாத் பகுதியில் ஒரு ஆய்வகத்தை துவங்கியுள்ளது.
இந்த மையத்தை கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் திறந்து வைத்தார் .
விழாவில், நியூபெர்க் டயக்னஸ்டிக்ஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர் டாக்டர் ஜி.எஸ்.கே. வேலு, தலைமை செயல் அலுவலர் ஐஸ்வர்யா வாசுதேவன், தொழில்நுட்ப இயக்குனர் மற்றும் தலைமை நுண்ணுயிர் நிபுணர் டாக்டர் சரண்யா நாராயண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோவையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வகத்தில், பரிசோதனைக்கு தேவையான அனைத்து கருவிகளும் உள்ளன.
நாள் ஒன்றுக்கு 1000 மாதிரிகளை பரிசோதனை செய்ய முடியும். பரிசோதனையின் தன்மையை பொறுத்து தரமான பரிசோதனை முடிவுகள் கிடைக்கும். இந்த மருத்துவ பரிசோதனை ஆய்வகம் ஊட்டி, ஈரோடு மற்றும் உமன் சென்டர் மதர்உட் ஆகிய இடங்களில் கானோலி காட்சி மூலம் துவங்கப்படவுள்ளது.
விரைவில், பௌ;ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட 10 இடங்களில் ஆய்வகங்களும், 100 இடங்களில் மாதிரிகள் சேகரிப்பு மையமும் அமைக்கப்படும். பொதுமக்கள் நலமையம், வருமுன் நலம் காக்க பரிசோதனைகள், வீடுகளில் மாதிரி சேகரித்தல் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்படும்.
கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, வால்பாறை, அவிநாசி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகள், செவிலியர் விடுதிகள் மற்றும் சிறு ஆய்வகங்களின் தனிப்பட்ட சிறப்பு பரிசோதனைகளிலும் இந்த ஆய்வகம் கவனம் செலுத்தும்.
இந்த நிகழ்ச்சியில் திமுக மாநில தகவல் தொழில் நுட்ப அணி துணைச் செயலாளர் மகேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
– சீனி,போத்தனூர்.