தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பாக ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை வாகன கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது இந்த கணக்கெடுப்பு பணியானது போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும், சாலை விரிவாக்கம், மற்றும் மேம்பாலங்கள் அமைத்தல் போன்றவைகளுக்காக நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் இந்த பணி நடைபெற்று வருகிறது பொள்ளாச்சி நெடுஞ்சாலைத்துறை சார்பில் தேர் நிலையம், திருவள்ளுவர் திடல்,
மற்றும் சில பகுதிகளில் (4.05.2022 முதல்10.05.2022) வரை கணக்கெடுப்பு பணி நடைபெறும் என்று நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர். நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-அலாவுதீன் ஆனைமலை.