கோவை மாவட்ட அளவிலான ‘பாடி பில்டிங்’ மற்றும் சிறந்த ‘பிசிக்’ போட்டிகள், வரும் 15ம் தேதி நீலம்பூர் ‘டெக்கத்லான்’ வளாகத்தில் நடைபெறவுள்ளது. கோவை மாவட்ட ‘பெஸ்ட் பிட்னஸ் சங்கம்’ மற்றும் நீலம்பூர் ‘டெக்கத்லான்’ சார்பில், மாவட்ட
அளவிலான உடற்கட்டு மற்றும் ஆண்கள் ‘பிசிக்’ சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. பாடி பில்டிங் போட்டியில், 55, 60, 65, 70, 75, 80, 80+ ஆகிய எடை பிரிவுகளிலும், ஆண்கள் பிசிக் பிரிவில், 175 செ. மீ. , மற்றும் 175+ செ. மீ. , ஆகிய இரண்டு பிரிவுகளிலும் போட்டிகள் நடக்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் போட்டியாளர்களுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் அனைத்து போட்டியாளர்களுக்கும், பதக்கம் வழங்கப்படுகிறது. ‘பாடி பில்டிங்’
போட்டியில் ‘சாம்பியன் ஆப் சாம்பியன்’ பட்டம் பெறும் வீரருக்கு, பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் சைக்கிள் வழங்கப்படுகிறது. பங்கேற்க விரும்பும் வீரர்கள், 97867 60163, 63836 50558 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்!!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப் கோவை.