கோவை மாவட்டம் பொள்ளாச்சி தமிழக கேரளா எல்லை பகுதியிலுள்ள மீனாட்சிபுரம், கோவிந்தாபுரம்,கோபாலபுரம், நெடும் பாறை, வண்ணாமடை, குன்னம் காட்டுப்பதி மற்றும் கேரளா மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் கூலிக்கு வேலைக்கு செல்பவர்கள்
என அனைவரும் கறவை மாடுகள் வளர்த்து இரவு பகல் பாராமல் பால் உற்பத்தியில் ஈடுபட்டு
வருகின்றனர் இந்நிலையில் இவர்களுக்கு போதிய வருவாய் இல்லை என தெரிவித்து வருகின்றனர்.
மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் தர்மராஜ், தியாகு குமார் இருவரும் கூறுகையில்:
போதுமான வருவாய் கிடைப்பதில்லை இரவு, பகல் பாராமலும் நல்லது கெட்டதுக்கு செல்லாமலும் பால் உற்பத்தி தொழிலை நாள்தோறும் தவறாமல் செய்யும் எங்களுக்கு
போதிய வருவாய் இல்லாமல் பால் உற்பத்தி தொழிலை மிகவும் சிரமப்பட்டு செய்து வருகின்றோம். இந்நிலையில் எங்கள் MDFA சங்கத்தின் மூலம் பால் உற்பத்தித் துறையில் மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றோம்.
அதன் ஒரு பகுதியாக வருகின்ற 10.05.2022 செவ்வாய்க்கிழமை 9:30 மணி அளவில் பாலக்காடு கோட்டை மைதானத்தில் துவங்கி பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பால் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து பால் உற்பத்தியாளர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால்
இந்தப் தர்ணா போராட்டத்தை துவக்கி வைப்பதற்கு மலபார் டைரி ஃபார்மர்ஸ் அசோசியேசனின் மாநிலத் தலைவர் வேணுசெரியத் வருகை தர உள்ளார் மேலும் மலபார் டைரி ஃபார்மர்ஸ் அசோசியேசன் நிர்வாக பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு நமக்காக குரல் கொடுக்க வருகிறார்கள் ஆகையால் பால் உற்பத்தியாளர்கள் அனைவரும் ஒரே அணியில் திரண்டு வந்து நமது உழைப்பிற்கும் உரிமைக்கும் வலு சேர்க்க அன்புடன் அழைக்கின்றோம் என்று இருவரும் ஒருமித்த குரலில் பதிவு செய்தனர். மேலும் இது குறித்து முழுமையான தகவல் பெற அழைக்க வேண்டிய அலைபேசி எண்கள்: 9745784569,9095309031.
பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு, பால் உற்பத்தியாளர்கள் MDFA. தேதி மற்றும் நேரம் 10.05.2022 ( 9.30am ) செவ்வாய்க்கிழமை.
-M.சுரேஷ்குமார்.