கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிறுத்தத்தில் பேருந்து தினந்தோறும் தாமதமாக வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. கோவை மாவட்டத்தில் சாலை விரிவாக்கம் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக சாலைகள் இருப்பதால் உரிய நேரத்தில் பேருந்துகள் வரவில்லை என்றும் சில நேரங்களில் பேருந்துகள் முற்றிலும் வரவில்லை என்றும் வெள்ளலூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:
பேருந்து ஓட்டுநரிடம் இருந்து வரும் பதில் நகரங்களில் இருந்து வரும்பொழுது போக்குவரத்து நெரிசல் காரணமாக எங்களால் பேருந்தை இயக்க முடியவில்லை என்றும் உரிய நேரத்தில் பேருந்து நிறுத்தத்திற்கு வரமுடியவில்லை என்றும் பதில் கூறுகின்றனர் இதனால் பொதுமக்கள் பணியில் இருந்து திரும்புவது மிகச் சிரமமாக இருப்பதாகவும் இதனை விரைவாக சாலை பணிகளை முடித்து தர வேண்டுமென்றும் இதனை கவனத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து விரைவில் பேருந்தை உரிய நேரத்தில் இயக்க வேண்டும் என்று அங்கு வசிக்கும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஈசா. செய்யது காதர்.