கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ,பொள்ளாச்சி தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் வார்டு 2,3,14 15,16 வார்டு கவுன்சிலர்கள் மற்றும் மதிமுக திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுடன் இணைந்து கேக் வெட்டப்பட்டது.
இவ்விழாவில் 15 வது வார்டு கவுன்சிலர் சையது யூசுப்( எ)துரை பாய் கூறுகையில் மே தின விழாவில் எங்களுடன் சேர்ந்து பணியாற்றும் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,அவர்கள் தான் நம்மை பாதுகாத்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களை நாம் போற்ற வேண்டும் என்றார். விழாவில் அனைவருக்கும் உணவளித்து சிறப்பாக முடிவுற்றது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி.