கோவை மாவட்டம் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய புத்தகங்கள், பொள்ளாச்சி நேதாஜி ரோடு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது,”பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம், 60 பள்ளிகள் உள்ளன. அதில், 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, 20,314 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள், தற்போது மையத்தில் இருப்பு வைக்கப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, 23,300 பாட புத்தகங்களும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்துக்கு, 5,743 பாடப்புத்தகங்களும் வந்துள்ளன.
மேலும், பாடப்புத்தகங்கள் வர உள்ளன. அரசின் உத்தரவு வரும் வரை பாட புத்தகம் இருப்பு வைக்கப்படும். அரசு உத்தரவு வந்ததும் பள்ளிகளுக்கு அனுப்பும் பணி துவங்கப்படும்.” இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திக்களுக்காக
-V. ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி.