கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மீன்கரை சாலையில் அமைந்துள்ள அரசு தேங்காய் பருப்பு கொள்முறல் மையமான பொள்ளாச்சி ஒடுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேரில் ஆய்வு செய்தார்.
ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் மாவட்ட ஆட்சியர் G.S. சமீரன் மே 18 ஆம் தேதி புதன்கிழமை திடீர் என நேரில் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின்போது பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே, சுபம் ஞான தேவ் ராவ் , மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர் விவசாயத் துறை தமிழ் செல்வி, கோவை விற்பனைக்குழு தனி அலுவலர் சுந்தர வடிவேல், கோவை விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் கெளசல்யா மோகன், போன்றவர்கள்
திடீர் நேரில் ஆய்வில் உடனிருந்தனர்.
அந்த ஆய்வின் பொழுது அதிகாரிகளிடம் விவசாயிகளுக்கு தங்குதடையின்றி அரசு கொப்பரை
கொள்முதல் செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என
அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அரசு தென்னை விவசாயகள் பயன்பெறும் வகையில் கொள்முதல் ரூ 105-10 | ஒரு கிலோவிற்கு விலை நிர்ணயம் செய்துள்ளது. மேலும் மே 18 ஆம் தேதி புதன்கிழமை 650 கொப்பரை தேங்காய் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன் ஆனைமலை.