கோவை மாவட்டம் போத்தனூர் பிரதான சாலையில், நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. மக்கள் போத்தனூர் ரயில் நிலையம் செல்வதற்கும், வெள்ளலூர், செட்டிப்பாலைபம் செல்லவதற்கும் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர். பாதால சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் சாலைகளிள் நெரிசல் அதிகமாகவே
காணப்படுகிறது.
அதே போல் மழை காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால், குண்டும் குழியுமாக உள்ள இடங்களில் வாகண ஓட்டிகள் விபத்துகள்ளாகிறார்கள். இந்த சாலையில் பிரபல வங்கிகள் அதிகமாக இருப்பதால் பென்ஷன் வாங்க அதிகமாக முதியோர்கள், பெண்கள் வருவதால் சாலையில் நடக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். மாநகராட்சி அதிகாரிகள் மோட்டார் முலம் தேங்கி இருக்கும் தண்ணீரை உறுஞ்சி அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-செய்யத் காதர்.