ரம்ஜான் மாதம் முடிந்த நிலையில் 1-05-2022 அன்று பிறை பார்க்கும் கூட்டம் இன்று கோவை மாவட்ட ஹிலால் கமிட்டி கூட்டம் மாலை 6:30pm மணிக்கு அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்றது, பிறை பார்த்த தகவல்கள் எல்லா பகுதிகளிலும் கேட்டறிந்து இன்று ரம்ஜான் பெருநாள் என்று முடிவு செய்யப்படும் என்று மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளியின் நிர்வாகிகள் தெரிவித்தார்கள்,
திங்கள் கிழமை பிறை தென்படாததால் மாதம் முப்பதாக பூர்த்தி செய்யப்பட்டு 03-05-2022 இன்று ரமதான் என்னும் நோன்பு பெருநாள் கொண்டாடபட்டது, போத்தனூர் st ஜோசப் நடுநிலை பள்ளியில் (மாதா ஸ்கூல்) மைதானத்தில் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளியின் மூலம் தொழகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது, இந்த திடலில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் குடும்பத்துடன் கலந்து தொழகையை நிறைவேற்றினார்கள்.
-செய்யது காதர் குறிச்சி.