கோவை மாவட்ட மாநகராட்சி 99வது வார்டு உட்பட்ட ஶ்ரீராம் பகுதி ஒன்று முதல் ஒன்பது வீதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு இருபக்கமும் உள்ள சாலைகள் பழுதடைந்து உள்ளதால் அந்தப் பகுதியில் புதிதாக சாலைகள் போட வேண்டும் என்று 99 வார்டு கவுன்சிலர் அஸ்லாம் பாஷாவிடம் மக்கள் கோரிக்கை வைத்ததார்கள்,
அதை தொடர்ந்து 99வது வார்டு மாமன்ற உறுப்பினர் அஸ்லாம் பாஷா மேற்கொண்ட முயற்சியால் ஶ்ரீராம் நகர் பகுதியில் சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு இன்று 9-05-2022 ஶ்ரீராம் நகர் பகுதியில் சாலைகள் அமைக்கும் பணி ஆரம்பிப்பதற்கான பூஜை போடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி,குறிச்சி வடக்கு பகுதி பொறுப்பாளர் S. A காதர்,கோவை மாநகராட்சி உயர் அதிகாரிகள் பொறியாளர்,உதவி பொறியாளர்கள் மற்றும் 99வது மாமன்ற உறுப்பினர் மு.அஸ்லாம் பாஷா,99 வட்ட பொறுப்பாளர்கள் ஜின்னா, சம்சுதீன் முரளிதரன், எஸ்ஏ சாதிக், கமலக்கண்ணன் ஷாஜகான், சுலைமான், பைசல், வாசிம் ராஜா, மற்றும் கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தலைமை நிருபர்- ஈசா,
செய்யதுகாதர்.