மஞ்ச நாயக்கனூரில் ஆழியார் போலீசார் மே 4 ஆம் தேதி அன்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது மஞ்சநாயக்கனூர் ஆற்றுப்பாலத்தில் சந்தேகத்துக்கு இடமான முறையில் மஞ்சப்பையுடன் நின்று கொண்டிருந்த மஞ்ச நாயக்கனூர் மாகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த அங்காத்தாள் (45 )வயதுடைய பெண்மணியை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்கு பின்னாக பதில் அளித்துள்ளார்.
எனவே சந்தேகமடைந்த ஆழியார் போலீசார் அவர் வைத்திருந்த பையை பிரித்து பார்த்ததில் அதில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது. இதனையடுத்து அந்தப் பெண்மணிமீது ஆழியார் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன் ஆனைமலை.