வேலூர் வேலங்காடு திருவிழா சைபர் கிரைம் விழிப்புணர்வு!

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,  ராஜேஷ்கண்ணன் அவர்களின் உத்தரவின் பேரில்  வேலூர் வேலங்காடு திருவிழாவிற்கு வந்த பொதுமக்களுக்கு சுமார் 300 நபர்களுக்கு பெருகிவரும் இணையவழி குற்றங்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவற்றிலிருந்து கவனமுடன் இருக்க போதுமான வழிமுறைகள் குறித்தும், குறிப்பாக சைபர் கிரைம் போலீசார் மூலம் இணையம் வழியாக நடக்கும் குற்றங்களான ஏடிஎம் கார்டை பயன்படுத்துவது பற்றியும், ஏடிஎம் கார்டு மற்றும் ஒடிபி எண் பகிரகூடாது என்பது பற்றியும், வங்கி விவரங்களை யாருக்கும் கூறக்கூடாது என்றும், வேலை வாங்கி தருவது, கடன் வழங்கும் செயலிகள், ஆபாச வீடியோக்கள் மூலம் மிரட்டி பணம் பறித்தல், எண்ம நாணயம் (Cryptocurrency) மோசடி, அயல்நாடு வேலைக்கு செல்வது,

செல்போன் டவர் வைப்பது, பரிசு கிடைத்திருப்பது, சமூக வலைதளங்கள், தங்களை பற்றிய தகவல்களை பாதுகாப்பாக வைப்பது குறித்து, பாஸ்வேர்டு அடிக்கடி மாற்ற வேண்டுவது குறித்தும், ஆன்லைன் விளையாட்டு குறித்தும், தேவையில்லாத அப்ளிகேசன் குறித்தும், வங்கிகளில் பணம் செலுத்தும் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும், மேலும் பண இழப்பு ஏதேனும் ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண்,

1930 க்கு உடனடியாக தகவல் அளிப்பது குறித்தும், http://www.cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் எவ்வாறு புகார் செய்வது என்பது குறித்து மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், காவல் உதவி செயலி யின் முக்கியத்துவம் குறித்தும் தெரிவிக்கப்பட்டு நிகழ்ச்சியில் சைபர் கிரைம் சம்பந்தமான துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

-P.இரமேஷ் வேலூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp