போத்தனூர் சாரதாமில் ரோடு 98வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சுந்தராபுரம் மற்றும் போத்தனூர் பகுதியை இனைக்கும் பிரதான சாலை சாரதாமில் ரோடு இங்கு திரையரங்கம், டாஸ்மாக், மருத்துவமணை உணவகங்கள் அதிக அளவில் உள்ளதால் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
இந்த பகுதியில் உள்ள மின்கம்பம் கீழ் பகுதியில் அரிப்பு ஏற்பட்டு சாய்ந்து விழும் நிலையை கண்டு மக்கள் மின்சார துறை அலுவலகத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது மின்சாரதுறை ஊழியர்கள் மின் கம்பத்தை மாற்றுவதற்கு பதிலாக அருகில் உள்ள கட்டிடத்தின் துனுடன் கயிற்றால் மின் கம்பத்தை கட்டி சென்றதாக தெரிகிறது. இதைப் பார்த்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இருப்பதால் மின்கம்பம் சாய்ந்து விபத்து ஏற்படுவதற்கு முன் மின்கம்பம் மாற்றி கொடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
-செய்யத் காதர். குறிச்சி.