பொள்ளாச்சியில் தெற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பிருந்து CITU & AITUC சங்கங்கள் சார்பாக மே தின பேரணி….!!!!
கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மே தின விழா கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த வகையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலும் CITU & AITUC சங்கங்கள் சார்பாக மே ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை நேற்று மாலை 5 மணி அளவில் மே தின பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணி பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துவங்கி பொள்ளாச்சி பேருந்து நிலையம் ரவுண்டானா அவை கடந்து கோவை ரோடு வழியாக சென்று பொள்ளாச்சி அஞ்சல் அலுவலகம் ரோடு, ராஜா மில் ரோடு வழியாக சென்று திருவள்ளுவர் திடல் வந்தடைந்தது. இந்த மே தின பேரணியில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன் ஆனைமலை.