வேலூர் அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்தவர் முகேஷ் குமார் நகை அடகு கடை வைத்துள்ளார். நேற்று காலை அவரது வீட்டின் மீது மர்ம ஆசாமிகள் பெட்ரோல் குண்டு வீசி தப்பினார். இதில் வீட்டின் முதல் மாடியில் உள்ள சுவர் தீப்பிடித்து கருகியது. சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில் அடகுக் கடைக்காரரிடம் பிரபல ரவுடி ரூ 20 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். அந்த ரவுடி தற்போது சேலம் மத்திய சிறையில் உள்ளார். இதனால் சிறையிலிருந்து அவர் போன் செய்தாரா? என விசாரிக்கிறோம், பணம் கொடுக்காததால் மர்ம ஆசாமிகள் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர் என்றனர்.
-P. இரமேஷ், வேலூர்.