ஆனைமலை சுற்றுப்பகுதிகளில் சாகுபடியாகும் இளநீர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மற்ற மாநிலங்களான மும்பை, ஆந்திரா, போன்ற பல்வேறு மாநில பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஆனைமலை பகுதிகளில் இளநீர் உற்பத்தி வரத்து குறைவாக இருக்கிறது. பண்ணையில் இளநீர் விற்பனை விலை பற்றி ஆனைமலை இளநீர் உற்பத்தியாளரும் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளருமான A.E. சீனிவாசன் அவர்கள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாவது:
“தற்போது ஆனைமலை பகுதிகளில் இளநீர் உற்பத்தி வரத்து பற்றாக்குறையாகவே உள்ளது. இந்த வாரம் ஜூன் 27ஆம் தேதி திங்கட்கிழமை முதல் நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் பண்ணை விலை ரூபாய் 32 என நிர்ணயம் செய்து எடைக்கு விற்பனை செய்தால் ஒரு டன் இளநீர் ரூபாய் 12000க்கு விற்பனை செய்து கொள்ளலாம்.”
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன், ஆனைமலை.