ஆனைமலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மின்னணு தேசிய வேளாண் சந்தை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கே ஒவ்வொரு வாரமும் தேங்காய் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. மேலும் விவசாயிகளிடமிருந்து தேங்காய் கொப்பரை கொள்முதலும் செய்யப்படுகிறது. விவசாயிகளின் விளைபொருட்களை கிடங்குகளில் வைத்து பாதுகாக்கப்பட்டும் வருகிறது. இந்த விற்பனைக் கூடத்திற்கு கோவை விற்பனை குழுவின் முதுநிலை செயலாளர் சாவித்திரி அவர்கள் திடீரென வந்து ஆய்வு செய்தார்.
அப்பொழுது விவசாயிகள் இருப்பு வைத்த கிடங்குளுக்குச் சென்று சுக்கு, பாக்கு, நெல் போன்ற பொருட்களை பார்வையிட்டு கிடங்குகளை ஆய்வு செய்தார்அதன் பின்னர் தேங்காய் கொப்பரை கொள்முதல் ஆதார விலை திட்டத்தில் மூட்டைகளில் கீயூ ஆர் கோடு சரியாக பதியப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து அதனையடுத்து அலுவலகத்திற்குச் சென்று பதிவேடுகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் பொழுது ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் அவர்கள் மற்றும் அலுவலர்கள் என உடனிருந்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-அலாவுதீன் ஆனைமலை.