பொள்ளாச்சி ஆனைமலை மீன்கரை சாலை வளர்ந்தாயமரம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் மற்றும் இப்பகுதி பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் குடிநீர் டேங்க் அருகே பிரதான சாலையோரத்தில் காய்கறி கழிவுகள், வீட்டுக் கழிவுகள், ஹோட்டல் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் மது பாட்டில்கள் மற்றும் மருத்துவக் கழிவுகள் என கழிவு பொருட்கள் அதிகளவில் நாள் தோறும் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இங்கு துர்நாற்றம் வீசுவதோடு சுற்றுசூழல் மற்றும் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
அதே சமயம் இப்பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் குடிநீர் தொட்டியும் இருப்பதால் குடிநீரில் நச்சுத்தன்மை ஏற்பட்டு விடுமோ என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இது குறித்து இப்பகுதியிலுள்ள பொதுமக்கள் கூறுகையில் “இதே நிலை தொடர்ந்தால்
குடிநீர் அசுத்தம் ஏற்படும் அபாயம் உள்ளது அதே சமயம் வரும் காலங்களில்
தண்ணீரை குடிக்க முடியாமல் மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாவார்கள் எனக்கு மன வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம் இவ்விடத்தில் குப்பைகள் கொட்டக்கூடாது மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என விளம்பரப் பலகை வைக்க வேண்டும் என இப்பகுதி உள்ள சமூக ஆர்வலர்கள் நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-M.சுரேஷ்குமார்.