காட்பாடியில் அடுத்த பிரம்மபுரத்தில் ஆற்று மணலை கள்ளத்தனமாக பதுக்கி வியாபாரம்!
வேலூர் மாவட்டத்தில் மணல் திருட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வரும் பாலாற்றில் மணல் எடுப்பதைத் தடுக்க வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அவர்களின் உத்தரவின் பேரில் குழுக்கள் அமைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் ஆற்று மணலை திருடி கள்ளத்தனமாக பதுக்கி வைத்து வியாபாரம் செய்து வருவதாக காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் தலைமையில் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது பதுக்கி வைத்திருந்த 40 யூனிட் மணலை காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் ஆகியோர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 40 யூனிட் மணலை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
-P. இரமேஷ் வேலூர்.