பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுத்துள்ளது.. அந்த வகையில் இந்தியாவில் சராசரி ஒரு நாள் பாதிப்பு 10,000-க்கும் மேல் பதிவாகி வருகிறது.. எனவே கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.. இதனிடையே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. கடந்த 3 நாட்களாக 1000-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி வருகிறது.
மேலும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளான மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகளை கழுவுவது போன்றவற்றை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. மேலும் திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வெளியே செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.. தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ” சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல், முகக்கவசம் அணியாமல் கவனக்குறைவாக இருத்தல் போன்ற காரணங்கள் தொற்று அதிகரித்து வருகிறது.
எனினும் சமூக இடைவெளியை கடைபிடித்தல், வாய், மூக்கை மூடுமாறு முகக்கவசம் அணிதல், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுதல், தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் நோய் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும்.. எனவே பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடமும், கோவிட் வழிமுறைகளை முறையாக கடைபிடிக்காதவர்களிடமும் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939ன் படி அபராதம் விதிக்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
– Ln இந்திரதேவி முருகேசன் / சோலை ஜெய்க்குமார்