அதிமுக துணை ஒருங்கிணைப்பாலரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தன்னை வீட்டிலேயே தனிமைபடுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, நேற்று புதிதாக 1,461 பேருக்கு கண்டறியப்பட்டது. தமிழகத்திலும் இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் நேற்று மட்டும் 697 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 34,23,557 பேர் குணமடைந்துள்ளனர். 8,222 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று 543 பேரும், செங்கல்பட்டில் 240 பேரும், 28-06-2022 அன்று கோவையில் மட்டும் 181 பேருக்கு புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-செய்யத் காதர், குறிச்சி.