கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டூரைச் சேர்ந்தவர் குமார். இவர் கோட்டூர் அருகிலேயே இவருக்குச் சொந்தமாக காயர் பித் உலர் களம் உள்ளது. இந்த காயர் பித் உளர் களத்தில் நேற்று திடீரென தீ பிடித்துள்ளது.
அங்கிருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளார்கள். தீ கட்டுக்கடங்காமல் மேலும் அதிகமானதால் பொள்ளாச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இத்தகவலை அறிந்த பொள்ளாச்சி தீயணைப்புத்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
நாளைய வரலாறு செய்திக்காக
-அலாவுதீன் ஆனைமலை.