காளியாபுரம் மாட்டேகவுண்டன் கோவில் அருகில் கரட்டு காடு என்னும் தோட்டத்தில் விவசாயி தேவராஜ் என்பவருக்கு 12 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோட்டத்தில் மூன்று பசு மாடுகள் இரண்டு கன்று குட்டிகளை வளர்த்து வருகிறார். நேற்றைய முன் தினம் மாடு மற்றும் கன்று குட்டிகளை தோட்டத்தில் உள்ள மாட்டு சாலையில் கட்டி வைத்து விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டு இன்று அதிகாலை தோட்டத்திற்கு வந்து பார்த்தபோது மாட்டு சாலையில் கட்டி வைத்திருந்த நான்கு மாத கன்றுக் குட்டியை ஏதோ மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்ததுள்ளது. இதனையடுத்து விவசாயி தேவராஜ் ஆனைமலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
விரைந்து வந்த போலீசார், தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது இறந்து கிடந்த கன்று குட்டி இடத்திற்கு அருகில் ஏதோ விலங்கின் கால் தடம் பதிந்து உள்ளதை போலீசார் கண்டு உல்லனர். இதனை அடுத்து, போலீசார் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கன்று குட்டியை கடித்த விலங்கு சிறுத்தை தான் என உறுதிசெய்து, சம்பவ இடத்தை பார்வையிட்டு வருகின்றனர். இதனால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன், ஆனைமலை.