கோவை அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணிக்குச் செல்ல தவறிய தலைமை காவலர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று இரவு, கோவை அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணிகள் குறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு வழக்கமான பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர் பணியில் இல்லாமல் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து, மீண்டும் இரண்டாவது முறையாக ஆய்வு மேற்கொண்ட போதும், பணிக்கு வர வேண்டிய தலைமை காவலர் ஏழுமலை என்பவர் பணிக்கு வராமல் இருந்துள்ளார். இதையடுத்து, பணிக்கு வராத தலைமை காவலர் ஏழுமலையை பணியிடை நீக்கம் செய்ய மாநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டார். இதையடுத்து ஏழுமலை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
-இளம் தந்தி.