கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த வேலுச்சாமி, சாந்தி தம்பதியினரின் மகன் ரித்திக் பிரணவ் (11) வயதான சிறுவன் ரித்திக் அதே பகுதியில் உள்ள முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கழகத்தில் சிறு வயதே முதலே சிலம்பம் உள்ளிட்ட கலைகளை கற்று வருகிறார். இந்நிலையில் சிலம்பம் சுற்றுவதில் புதிய சாதனையாக கையில் ஒற்றை சிலம்பம் சுற்றியபடி, பின்னோக்கி 23 கிலோ மீட்டர்கள் ஓடி இந்தியன் புக் ஆப் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறுவன் ரித்திக் காலை ஆறு மணி முதல் 10 மணி வரை தொடர்ந்து சிலம்பம் சுற்றி, பின்னோக்கி ஓடினான்.சாதனை சிறுவனை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கைகளை தட்டி ஊக்கமளித்தனர். சாதனை சிறுவன் ரித்திக்கிற்கு தீர்ப்பாளர் பிரகாஷ் ராஜ் மற்றும் நிறுவனர் சதாம் உசேன் ஆகியோர் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கவுரவித்தனர்.
-சீனி, போத்தனூர்.