சரியில்லாத பாதை! சறுக்கி விழும் நிலையில் வாகன ஓட்டிகள்!!
கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ளது தக்காளி மார்க்கெட் இங்கு காலை வேளைகளில் மக்கள் கூட்டம் மிகுந்து காணப்படும் மேலும் விவசாயிகள் தாங்கள் கொண்டு வரும் பொருட்களை ஏலம் விடும் முறை மூலம் வியாபாரிகளும் பொதுமக்களும் பொருட்களை வாங்கிச் செல்வார்கள் இதற்காக இரு சக்கர வாகனங்களிலும், ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்களிலும் வருவார்கள். இந்த சூழ்நிலையில் மதுக்கரை மார்க்கெட் ரோடு பகுதியில் இருந்து தக்காளி மார்க்கெட்டுக்கு உள்ளே செல்லும் முகப்பு பகுதியில் வாகனங்கள் உள்ளே சென்று வர மிகவும் சிரமப்பட வேண்டிய சூழ்நிலையில் பாதை குண்டும் குழியுமாக ஒழுங்கற்ற முறையில் உள்ளது. மேலும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் அங்கு தரையில் கிடக்கும் சிறு சிறு கற்கள் டயர்களில் பட்டு சறுக்கி விழும் நிலையில் உள்ளது.
தக்காளி மார்க்கெட்டின் உள்ளே இருந்து பொருட்களை வாங்கிக்கொண்டு வெளியே வருபவர்களும் பொருட்கள் வாங்க உள்ளே செல்பவர்களும் இந்த ஒழுங்கற்ற பாதையினால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது எனவே உடனடியாக இதை சரி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.