நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திலிருந்து இளம்பிள்ளை வழியாக மேட்டூருக்கு செல்லும் தனியார் பேருந்து இன்று காலை 8 மணிக்கு காகாபாளையம் பேருந்து நிறுத்ததில் பயணிகள் இறங்கிக்கொண்டு இருந்தனர்
காகாபாளையம் பகுதியில் மிகவும் குறுகலான வளைவு தேசிய நெடுஞ்சாலை மேம்பால பணி நடைபெற்று வருவதால் சர்வீஸ் ரோட்டில் அனைத்து வாகனங்களும் வருகிறது அவ்வப்போது தவறான பாதையில் வாகனங்கள் வருவதால் லேசான போக்குவரத்து நெரிச்சல் ஏற்படுவது வழக்கம்,
அதே நேரத்தில் எடப்பாடியிலிருந்து ராசிபுரம் நோக்கி வந்த தனியார் கல்லூரி பேருந்தும் வந்ததது அப்போது தனியார் பேருந்தும் லேசாக உறசியது உடனே நிறுத்தாமல் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோட்டில் பேருந்தை நிறுத்திய தனியார் பேருந்து ஓட்டுநர் கல்லூரி பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் இதனால் கோவை மார்க்கத்தில் சுமார் 4 கிலோமீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து நெரிச்சல் ஏற்பட்டது இதனால் ஆம்புலன்ஸ்களும் பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் பெரும் அவதிக்குள்ளாகினர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-ச.கலையரசன் மகுடஞ்சாவடி.