திருப்பூர் மாவட்டம் 15 வேலம்பாளையம் பகுதியில் உள்ள பள்ளிவாசல் சுமார் 4 வருடங்களாக மூடப்பட வேண்டும் என தனிப்பட்ட நபர்கள் வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இன்னமும் வழக்கு நடந்து கொண்டிருக்கும் பட்சத்தில் தீர்ப்பு நாளை அல்லது மறுநாள் வர இருக்கும் வேளையில் திடீரென 15 வேடம்பாளையத்தில் உள்ள பள்ளிவாசலை போலீஸ் அதிகாரிகள் இருவர் சென்று மூடி சீல் வைத்தனர். மேலும் காவல்துறையினர் மங்கலத்தில் இருந்து செல்லும் அனைத்து நபர்களையும் எங்கு செல்கிறீர்கள் என்று விசாரித்து அனுப்புகின்றனர்.
பள்ளிவாசல் இருக்கும் குறிப்பிட்ட பகுதிக்கு செல்ல போலீசார் அனுமதிக்காததால் மக்கள் ஆக்ரோஷம் அடைந்துள்ளனர்.
இது மிகவும் திருப்பூரில் பரபரப்பான சூழ்நிலையில் ஏற்படுத்தி உள்ளது. அனைத்து ஜமாத்தார்களும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பிட்ட மங்களம் பகுதியில் போராட்டத்தின் போது போலீஸ் அதிகாரி ஒருவர் தனி நபரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டதற்காகவே காவல்துறையினர் அடித்தனர் என்று தனி நபர் கருத்து தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற ம உத்தரவின்றி காவல்துறையினர் பள்ளிவாசலை மூட சென்றது பெரிதல்ல முன்னறிவிப்பின்றி செய்ததே இந்த போராட்டத்திற்கான காரணம் என்று அப்பகுதி மக்கள் அனைவரும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
திருப்பூர் முழுவதும் போராட்டங்கள் முழக்கங்கள் மூலம் பரபரப்பாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக
-பாஷா, திருப்பூர்.