தி நகர் அல்நூர் இஸ்லாமிய நலச் சங்கத்தின் 5ம் ஆண்டு பொதுச்சபை கூட்டம் 26.06. 2022 ஞாயிறு மாலை 5.45 மணி அளவில் சங்க அலுவலகத்தில் வைத்து தலைவர் Dr. முஹம்மது அப்துல் காதிர் தலைமையில் நடைபெற்றது. ஆரம்பமாக ஹாஜி. பஷீர் அஹமது, கிராத் ஓத சங்கத்தின் துணைத் தலைவர் S. ரபிகனி வரவேற்புரை நிகழ்த்தினார். செயலாளர் அ. பஷீர் அகமது, 2021 – 22 ம் ஆண்டின் செயலறிக்கை சமர்ப்பிக்க பொருளாளர் ஜலாலுத்தீன் 2021 – 22 ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை சமர்பித்தார்கள்.
சிறப்பு அழைப்பாளராக டைமண்ட் காதர் முகைதீன் ஹாஜியார் கலந்து கொண்டு 12 ம் வகுப்பில் 587/600 மதிப்பெண்கள் பெற்ற கேம்பலாபாத்தைச் சார்ந்த ஏழ்மை நிலையிலும் சாதனை படைத்த மாணவி ருமானாவிற்கு பரிசுத் தொகை மற்றும் மேற்படிப்பிற்கு உதவித் தொகையாக ரூ. 10000 க்கான காசோலையை வழங்கி, சிறப்புரை ஆற்றினார்கள்.
இணைச் செயலாளர் ஹாஜி. உமர் ஜகுபர் நன்றி நவிழ கூட்டம் இனிதே நிறைவடைந்தது. இந்த கூட்டத்தில் இணைச் செயலாளர் சாதிக் அலி, செயற்குழு மற்றும் பொதுச்சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு செய்தியாளர்
-அன்சாரி, நெல்லை.