கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் தூய்மை இந்திய திட்டம் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் தூய்மை உறுதிமொழி, மாணவ மாணவிகள் முன்னிலையில்
எடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மற்றும் வால்பாறை நகரமன்ற தலைவர் திருமதி. அழகு சுந்தரவல்லி செல்வம், மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் திரு செந்தில், நகரமன்ற தூய்மை சுகாதாரத் துறை ஆய்வாளர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் இரா சே. அன்பரசன், கவிதா, முருகேசன்,கீதா லட்சுமி, சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டு வால்பாறையை தூய்மையான நகரமாக
உருவாக்கிட அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
-M.சுரேஷ்குமார்.