தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி கிளை சார்பாக மக்களுக்கு கேடு விளைவிக்கக் கூடிய கொடிய பழக்கமான மது, புகை மற்றும் புகையிலை சம்பந்தமாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆழ்வார்திருநகரி காவல்நிலையத்துடன் இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் சகோதரர் இம்ரான் தலைமை ஏற்று நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். இதில் அவர் மது, புகை மற்றும் புகையிலையினால் ஏற்படுகின்ற விளைவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் ஆழ்வார்திருநகரி காவல் உதவி ஆய்வாளர் சகோதரர் செல்வன் மக்களுக்கு கேடு விளைவிக்கக் கூடிய இந்த கொடிய பழக்கத்தின் விழிப்புணர்வு பிரச்சாரத்தை கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தொடர்ச்சியாக ஆழ்வார்திருநகரி கிளையின் செயலாளர் சகோதரர். ரியாஸ் அவர்களும் கிளையின் துணைத்தலைவர் சகோதரர். கமால்தீன் அவர்களும் ஆழ்வார்திருநகரியின் கீழ பஜார் மற்றும் மேல பஜார் போன்ற முக்கிய பகுதிகளில் 12 இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்தனர். .
மேலும் இதில் மது, புகை மற்றும் புகையிலைனால் ஏற்படும் கொடிய விளைவுகளை குறித்து துண்டு பிரசுரங்கள் 500 விநியோகம் செய்யப்பட்டது.
நாளைய வரலாறு செய்தியாளர்
– அன்சாரி, நெல்லை.