பொள்ளாச்சி தமிழக கேரள எல்லைப் பகுதியான கேரள மாநிலத்துக்கு உட்பட்ட பாலக்காடு மாவட்டம், சித்தூர் தாலுக்கா மீனாட்சிபுரம் அடுத்த முத்துசாமிபுதூர் ராமர் பண்ணை பகுதியில் அமைந்துள்ள
அருள்மிகு ஸ்ரீ நாககன்னியம்மன், மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன், ஸ்ரீ வன பத்திரகாளியம்மன் திருக்கோவிலில் ஸர்வ அமாவாசையை முன்னிட்டு இன்று ஸ்ரீ நாககன்னி அம்மனுக்கும் மற்றும் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள மற்ற அம்மன் களுக்கும் அம்பிகை அருள் வாக்கு சித்தர் கண்ணன் சுவாமிகள் அவர்கள் தலைமையில் சிறப்பு அலங்கார பூஜை மற்றும் தீபாரதனை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் என ஏராளமானோர் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சிறப்பு தரிசனத்தை கண்டு களித்தனர்.
மேலும் அம்பிகை அருள் வாக்கு சித்தர் கண்ணன் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறி ஆசி வழங்கினார். இதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் சுவாமி கைகளால் அன்னதானம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு வாரமும் கோவிலில் செவ்வாய்க்கிழமை தோறும் பிரசன்னம் பார்க்கப்படுகிறது அதேபோல ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் அருள்வாக்கு சொல்லப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பு மேலும் விரிவான விவரங்களுக்கு:-
கண்ணன் சுவாமிகள்
63814 34591.
நாளைய வரலாறு செய்திக்காக,
-M.சுரேஷ்குமார்.