பொள்ளாச்சி அருகே தென்சங்கம்பாளையம் கிராமத்தில் ரூ 85 லட்சம் செலவில் சமத்துவபுரம் பராமரிப்பு பணிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி…!!!!
முன்னாள் முதல்வர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது 1996-97 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் சாதி மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் ஒரே பகுதியில் வசிக்கும் வகையில் சமத்துவபுரங்கள் மூலம் வீடுகள் கட்டித்தரபட்டது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு கடந்த பத்தாண்டுகளாக சமத்துவபுரங்களில் உள்ள வீடுகள் பராமரிக்கப்படாததால் வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை அடுத்து தமிழகத்திலுள்ள சமத்துவபுரங்களை புனரமைக்க சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இதனையடுத்து பொள்ளாச்சி அருகே உள்ள தென்சங்கம்பாளையம் கிராமத்தில் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள 100 வீடுகளை புனரமைக்க 50 லட்சம் ரூபாய் மற்றும் சாலை, தெருவிளக்கு, குடிநீர், சமுதாயக்கூடம், உள்ளிட்ட பணிகளுக்கு 35 லட்சம் ரூபாய் என 85 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது
நேற்று தென்சங்கம்பாளையம் ஊராட்சித் தலைவர் எஸ்ஆர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் கலந்துகொண்டு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் யுவராஜ் தேவசேனாதிபதி கன்னிமுத்து பால்ராஜ் அஜிஸ் ஆளியார் ஆனந்த் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியம் துணைத்தலைவர் ரகுபதி லட்டு என்கின்ற ஞானப்பிரகாசம் வார்டு உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.
நாளையவரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன் ஆனைமலை.