பானிபூரி சாப்பிட்ட 97 குழந்தைகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு; மருத்துவமனையில் அனுமதி! பானி பூரி சாப்பிட்ட பல குழந்தைகளுக்கு நேற்று மாலை உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் பானி பூரி சாப்பிட்ட 97 குழந்தைகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. மத்திய பிரதேசத்தில் உள்ள மன்டலா மாவட்டத்தில் சிங்கார்பூர் என்ற பகுதி உள்ளது. பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான இங்கு, நேற்று பானி பூரி திருவிழா நடத்தப்பட்டது. இதில் அக்கம் பக்கம் உள்ள கிராமங்களில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பானி பூரி சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில், பானி பூரி சாப்பிட்ட பல குழந்தைகளுக்கு நேற்று மாலை உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், புட் பாய்சன் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. மொத்தம் 97 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, அவர்கள் அனைவரும் ஒரே கடையில் பானி பூரி சாப்பிட்டது தெரியவந்துள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட பானி பூரி கடைக்கு விரைந்த போலீசார் அந்த கடையில் இருந்த பொருள்களை பறிமுதல் செய்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.அத்துடன் அந்த பானி பூரி கடை உரிமையாளரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். பாதிக்கப்பட்ட குழந்தைகளை மத்திய மந்திரியும் அப்பகுதியின் எம்.பி.யுமான பக்கன் சிங் குலாட்சே, மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். இது தொடர்பாக மருத்துவர் ஷாக்யா கூறுகையில், 97 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில குழந்தைகளைத் தவிர மற்றவர்களுக்கு லேசான பாதிப்பே ஏற்பட்டுள்ளது. அனைவரும் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டனர். எனவே யார் உயிருக்கும் ஆபத்து இல்லை என்றார்.
கெட்டுப் போன கோழி இறைச்சியின் காரணத்தால் ஷவர்மா சாப்பிட்டு உயிர் போனதாக கூறி அது அரபு நாட்டு உணவு இங்கு தட்பவெப்ப நிலைக்கு சரிவராது என சுகாதாரதுறை அமைச்சர் ஷவர்மா உணவை தடை செய்ய சொன்னார் ஆனா இப்போ பானி பூரியை சாப்பிட்ட 97 குழந்தைகள். பாதிப்பு தடை செய்வாரா.? இல்லை…….. பானி பூரி தோ பிலேட் பானி பூரி தேதோஎன்று கூறுவாரா பொறுத்திருந்து பார்ப்போம.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
நமது தமிழக தெருக்களில் வடமாநில இளைஞர்கள் பெருமளவு பானி பூரி என்கின்ற ஒரு வகை உணவை சாலையில் வைத்து விற்பனை செய்கிறார்கள் ஆனால் சாலையில் ஏற்படும் தூசிகள் அந்த உணவின் மீது பட்டு சாப்பிட தகுதி இல்லாத உணவாக மாறுகிறது….. ஆனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் சாலையில் பயணிக்கும் பொழுது இதுபோன்ற சுகாதாரமற்ற உணவுகளை விற்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை… சோதனை மேற்கொள்வதும் இல்லை… சவர்மா என்ற உணர்வை சாப்பிட்டு ஒருவர் உயிரிழந்தார் அதுபோன்று ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மக்களின் விலைமதிப்பற்ற உயிரை காப்பாற்ற முடியும் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.
-சமூக ஆர்வலர்.