கோவையில் பாலகிருஷ்ணன் புதிய கமிஷனராக நியமனம்
புதிய கமிஷனராக மத்திய மண்டல ஐ.ஜி.,யாக பணியாற்றிய பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மதுரை, திருவண்ணாமலை, திருப்பூர், தேனி மாவட்டங்களில் எஸ்.பி.,யாக பணியாற்றியவர்.
திருச்சி டி.ஐ.ஜி., ஆகவும், சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனராகவும் பணியாற்றியுள்ளார்.
இதற்கு முன் கோவை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த பிரதீப் குமார், மத்திய அரசு பணிக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
-அருண்குமார் கிணத்துக்கடவு.
