முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை பிளாஸ்டிக் பைக்கு குட்பை என்ற திட்டத்தை 99வது வார்ட்டில் மாநகராட்சி ஆணையாளர், மாநகராட்சி மேயர் ,துணை மேயர் மற்றும் தெற்கு மண்டல தலைவர் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் 200 மேற்பட்ட மாணவ மாணவிகளோடு நடந்தே சென்று மக்களிடத்தில் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் 99வது மன்ற உறுப்பினர் மு. அஸ்லாம் பாஷா, 96வது மாமன்ற உறுப்பினர் குணசேகரன், 100 வது மாமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், வடக்குபகுதி பொறுப்பாளர் எஸ் ஏ காதர், வட்டபொருப்பாளர் முஹம்மது ஜின்னா, 99 வார்டு பொறுப்பாளர் முரளிதரன், ஆ பிரிவு பொறுப்பாளர் சம்சுதீன், மற்றும் ஷாஜன்,அன்சர்,சுலைமான்,வாசிம்ராஜா,ஏ சாதிக்,ஆதவன்,ரமேஷ்,
பிரவீன், மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தலைமை நிருபர்
-ஈசா.