ஆனைமலை அருகே உள்ள அம்பராம்பாளையம் ஊராட்சியில் பொது சேவை மையம் (CSC) நடத்தும் எட்டு ஆண்டுகளைக் கடந்து மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் முன்னோடியாக டிஜிட்டல் வில்லேஜாக மாறிவரும் அம்பராம்பாளையம் ஊராட்சி என்னும் நிகழ்ச்சி அம்பராம்பாளையம் சமுதாயக்கூடத்தில் நேற்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு G. தியாகராஜன் வரவேற்புரையாற்றினார் ஊராட்சி மன்ற தலைவர் F.சஹர் பானு பைசல் தலைமை தாங்கினார் திரு பாலமுருகன் (CSC) district manager) முன்னிலையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக ஆனைமலை வட்டாட்சியர் பானுமதி அவர்கள், திரு செந்தில்குமார் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி, திரு வாசுதேவன் (labour department)அவர்கள். நன்றி உரையை திருமதி.
விஜயலட்சுமி அவர்கள் வழங்கினார் இந்த நிகழ்வில் தூய்மை பணியாளர்களை பாராட்டுதல், மத்திய அரசின் இலவச கணினி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல், மத்திய அரசின் நலவாரிய அட்டை வழங்குதல், மத்திய அரசின் திட்ட பணியாளர்களின் கலந்துரையாடல், மத்திய அரசின் திட்டங்களை நமது ஊராட்சியில் செயல்படுத்தியதன் விவரம், மத்திய அரசின் விவசாய திட்டங்களை விளக்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாளைய வரலாறு செய்திக்காக
-அலாவுதீன் ஆனைமலை.