ஆனைமலையில் சேத்துமடை சாலையில் அமைந்துள்ள ஆனைமலை வாழைத்தார் மண்டியில் ஜூலை 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலையில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. இந்த வாழைத்தார் ஏலத்திற்கு ஆனைமலை சுற்று பகுதியை சேர்ந்த விவசாயிகள் வாழைத்தாரை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
அப்பொழுது அந்த வாழைத்தார் ஏலத்தில் கதலி வாழைத்தார் 300-500 பூவன் வாழைத்தார் ரூ.200-600-க்கும், மோரிஸ் வாழைத்தார் 600 வரைக்கும் செவ்வாழைத்தார் 900வரைக்கும் சாம்பிராணி வாழைத்தார் 300-700
வரைக்கும் ஏலம் போனது. தற்பொழுது இரண்டு நாட்களாக இப்பகுதியில் தொடர் மழை குறைந்ததால் வியாபாரிகள் வருகை அதிகரித்ததால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-அலாவுதீன் ஆனைமலை.