மாச்சம்பாளையத்திலிருந்து குனியமுத்தூர் தெற்கு மண்டல அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் பெட்ரோல் பங்க் உள்ளது அதன் எதிரே ட்ரான்ஸ்பார்மர் ஒன்று மிகவும் தாழ்வான நிலையில் இருக்கின்றது. உயரமான மனிதர்கள் தொடும் வகையில் டிரான்ஸ்பார்மர் இருக்கின்ற காரணத்தினால், விபத்து நடக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளது.
இந்த வழியாக தினம்தோறும் மின் சம்பந்தமான அதிகாரிகள் மற்றும் மண்டல தலைவரும் செல்கிறார்கள், ஆனால் யாரும் கண்டுக் கொள்வதில்லை எனவே விபத்து ஏற்படுவதற்கு முன் இதை சரி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுவதாவது:-
அந்த டிரான்ஸ்பார்மரை சுற்றி பெட்ரோல் பங்க்,டீக்கடை மற்றும் இதர கடைகள் உள்ளது. பேருந்து நிறுத்தம் இந்த டிரான்ஸ்பார்மர் அருகிலேயே இருக்கும் காரணத்தினாலும் பள்ளி குழந்தைகளும், வேலைக்குச் செல்லும் பயணிகளும் தினந்தோறும் இந்த டிரான்ஸ்பார்மர் அருகில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
மழைக்காலங்களில் மின்சாரம் கசிமோ என்ற அச்சத்துடன் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கும் முன் டிரான்ஸ்பார்மறை மாற்றி அமைக்க வேண்டும் இல்லாவிட்டால் உயரமான இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-A. சுமையா பர்வீன்.