நீண்ட நாட்களுக்குப் பிறகு தென்காசி மாவட்டத்தில் இன்று நல்ல மழை!! ஆனால் அதே நேரம் குற்றாலத்தில் இருந்து வரும் செய்தி மகிழ்ச்சியைத் தருவதாக இல்லை. கனமழை காரணமாக குற்றாலம் பேரருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 5 பேர் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாக தகவல். அதில் இருவர் உடல் மீட்கப்பட்டதாகவும் ஏனையோரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
வீடியோ வைரல் ↓
ஆண்டுதோறும் ஓரிருவர் தடாகத்தில் தவறியோ அல்லது மூச்சுத்திணறல் காரணமாகவோ உயிரிழப்பது உண்டு என்றாலும் இதேபோல திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழப்பு ஏற்பட்டது குற்றாலத்தில் மிகவும் வருந்தத்தக்கது. மழை இவ்வளவு பொழிகிறது என்கிற உடனேயே அந்தப் பகுதிகளுக்கு தடை விதித்து மக்களை காத்திருக்க வேண்டும் என்று மக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-பிரதீப் குமார், தாராபுரம்.