உடற்கூறு ஆய்வில் இறந்த மாணவிக்கு அதிகப்படியான ரத்தம் வெளியாகி இருக்கிறது. ரத்தப்போக்கு ஏற்பட்டு தான் மரணம் அடைந்திருக்கிறார். ஆக இந்த மாணவியின் இறப்பு நிச்சயமாக ஆசிரியரின் காம வெறியில் தான் முடிந்திருக்கிறது. தவிர அந்தப் பள்ளியின் நிர்வாகி உரிமையாளர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஐந்து நாட்கள் ஆகியும் போராட்டம் தீவிரமடைந்த பிறகும் இறந்த மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் உறவினர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
உரிய நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையை வைத்து அடக்கு முறையை ஏவ நினைத்து சட்டம் ஒழுங்கு கள்ளக்குறிச்சியில் சீரழிந்து விட்டது. இறந்த மாணவிக்கு
நீதி கிடைக்க வேண்டும். பசுவுக்காக தனது மகனையே பலி கொடுத்த மனுநீதிச் சோழன் வாழ்ந்த நாடு இது. என்பதே சமூக ஆரவலர்களின் கருத்தாக உள்ளது!!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.