கோவை மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்டது நல்லாம்பள்ளி கிராமம் இக்கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையன்மனைவி பட்டீஸ்வரி வயது சுமார் 65, இவர் ஜூன் 13ஆம் தேதி புதன்கிழமை நல்லம்பள்ளியில் நல்லாம்பள்ளி பூசாரிபட்டி சாலையில் அமைந்துள்ள ஒரு தோட்டத்திற்கு கூலி வேலைக்காக சென்றுள்ளார். அப்பொழுது தென்னை மரத்தின் அருகே சென்றபொழுது தென்னை மரம் வேரோடு சாய்ந்து பட்டீஸ்வரி மீது விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார் எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அறிந்த கோமங்கலம் காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரோத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக
-அலாவுதீன் ஆனைமலை.