கோட்டூர் சிறப்பு நிலை பேரூராட்சி மாதம் மாதம் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது அதன் அடிப்படையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சாலையோரங்களில் வணிக நிறுவனங்களால் ஆக்கிரமிப்பு செய்துள்ள மழைநீர் வடிகால்களை தூய்மை செய்யும் பணிகள் நடைபெற்றது.
அப்பொழுது அங்கு வந்த கோட்டூரை சேர்ந்த மூவர் அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தூய்மை பணியாளர்களை வேலை செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி அங்கு பணியில் இருந்த தூய்மைப் பணியாளர்களை பொது இடத்தில் வைத்து தகாத வார்த்தையால் திட்டிய வேலை செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்கள் எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து துப்புரவு பணியாளர்கள் கோட்டூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
நாளை வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன் ஆனைமலை.