கோவை குறிச்சி பகுதியில் 98 ஆவது டிவிசன் ராஜா முத்தையா நகரில் நாய் தொல்லை அதிகமாக இருக்கிறது. பக்கத்தில் முத்து விநாயகர் கோயில் இருக்கிறது.
கோவிலுக்கு யாரும் வந்து செல்ல முடியாதபடி இருக்கிறது. மேலும் இந்தப் பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளை நாய்கள் துரத்துவதால் கீழே விழுந்து அடிபடும் நிலைமை ஏற்படுகிறது.
எனவே இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டி பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-விக்னேஷ் பாபு.