மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர் மாவட்ட தெற்கு பகுதியில் ஆலோசனைக் கூட்டம் பகுதி செயலாளர் காஜா உசேன் அவர்கள் தலைமையில் பகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணைச் செயலாளர் ஹனீபா, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ஆஷிக் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி, உறுப்பினர் சேர்க்கை, பகுதி நிகழ்ச்சிகள் குறித்தும், நிர்வாக கட்டமைப்பை குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். மேலும் அவர்கள் முன்னிலையில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மஜகவில் இணைத்துக் கொண்டனர்.
இக்கூட்டத்தில் பகுதி பொருளாளர் ஜாபர் அலி, பகுதி துணைச் செயலாளர்கள் ஜியா உல் ஹக், அபுதாஹீர், இஷாக் முஹம்மது, ரியாசுதீன், இளைஞர் அணி பகுதி செயலாளர் சாதிக் பாஷா, சுற்றுச்சூழல் அணி பகுதி செயலாளர் முகமது கனி, மாணவர் இந்தியா பகுதி செயலாளர் அர்ஷத், வர்த்தக அணி பகுதி செயலாளர் நசீர் அஹமத், மற்றும் பகுதி நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.