“ஈராயிரம், மூவாயிரம் ஆண்டுகளாக சேர, சோழ, பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் நிகழாத அற்புதங்களெல்லாம் காமராஜர் ஆட்சியில் நிகழ்கின்றன” என்று தந்தை பெரியார் மனமுவந்து பாராட்டும் வகையில் ஆட்சியை தந்த காமராஜர் அவர்களின் 120வது பிறந்தநாள், கல்வி வளர்ச்சி நாளாக மாநிலம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.
தமிழ்நாட்டில் துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு இலவசக்கல்வி, மதிய உணவுத்திட்டம் என பல திட்டங்களை தொடங்கி ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ என போற்றப்படும் அவரது பிறந்தநாளான நேற்று சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி எண் 1ல் மாணவ, மாணவியருக்கு தேவையான உபகரணங்கள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மமக மாவட்டச்செயலாளர் கமரல் ஜமான், சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, சிங்கம்புணரி தமுமுக நகர் தலைவர் அப்துல் வஹாப், செயளாலர் சேக் அப்துல்லா, மமக நகர் செயலாளர் ஜாபர் அலி, திருப்பத்தூர் நிர்வாகிகள் ர.ரஹ்மத்துல்லாஹ், அப்துல் அஜீஸ் S.ரஹ்மத்துல்லாஹ், அசாருதீன் மற்றும் சிங்கம்புணரி SDPI நிர்வாகி அன்வர் தீன், தலைமையாசிரியை அழகு மற்றும் ஆசிரியர்கள், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் சிவனேஷ் ராஜா, முன்னாள் கவுன்சிலர் ரபீக் அகமது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.