‘ஒளிமிகு பாரதம், ஒளிமயமான எதிர்காலம்’ எனும் முழக்கத்துடன் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த பங்கேற்புடன் ஜூலை மாதம் 25ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் மின்சாரப் பெருவிழா கொண்டாடப்படுகிறது. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் இந்நிகழ்வு நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் தலைமை தாங்க, மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி முன்னிலை வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக மின்மயமாக்கல் நிறுவனத்தின் சார்பில் அதன் பொது மேலாளர் உதயகுமார், தமிழ்நாடு மின் உற்பத்தியை மற்றும் பகிர்மான கழகத்தின் மேற்பார்வை பொறியாளர் ரவி, செயற்பொறியாளர் செல்லத்துரை, பொறியாளர்கள் சாத்தப்பன், கணேசன், ராஜா, பார்த்திபன் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மின்சார விழிப்புணர்வு தொடர்பான கலை நிகழ்ச்சிகள் விமர்சையாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.