சென்னை அருகே புதிய விமான நிலையம் எங்கு அமைகிறது என்பது குறித்து டெல்லியில் ஆலோசனை நடத்தப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. சென்னையில் விமான பயணத்தை அதிகம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் இன்னொரு விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் சென்னை அருகே புறநகர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இதற்கான இடம் தேர்வு செய்வதில் தொடர்ந்து தாமதம் நிலவி வந்தது. இதனிடையே காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர், மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பன்னூர் ஆகிய இடங்களை ஆய்வு செய்த ந்திய விமான நிலைய அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த இரு இடங்களில் ஒரு இடத்தில் விமா நிலையம் அமைக்க ஏதுவாக இருக்கும் என கருதினர்.
இதையடுத்து அதுகுறித்த அறிக்கையை டெல்லி விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் வழங்கியது. மேலும் விமான நிலையத்திற்கு இடம் தேர்வு செய்யும் பணி தமிழக தொழில் துறையிடம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் டெல்லியில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுடன் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை நடத்துகிறார். இதன் முடிவில் எந்த புதிய விமான நிலையம் அமைய போகும் இடம் இன்று இறுதி செய்யப்படும் என தெரிகிறது.
-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.