கோவை புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் அந்தோணி ராஜ், 27. இவர் சோமையம்பாளையத்தில் உள்ள தனியார் கம்பெனியில், டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அந்தோணி ராஜ் மற்றும் அவருடன் பணிபுரியும் கலைச்செல்வன், சுரேஷ் ஆகிய மூவரும், சோமையம்பாளையம் – கே.என்.ஜி.புதூர் செல்லும் சாலையில் இரவில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த மூவர் சுரேஷின் மொபைல் போனை பறித்து கொண்டு தப்ப முயன்றுள்ளார்.அப்போது, அந்தோணி ராஜ், போனை பிடுங்கிய நபரின் கையை பிடித்து இழுத்துள்ளார்.இதில், நிலை தடுமாறி பைக்குடன் மூவரும் கீழே விழுந்துள்ளனர். அவர்களை பிடிக்க முற்பட்டபோது மூவரும், அந்தோணிராஜை தாக்கி விட்டு, மொபைல் போனையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
அந்தோணி ராஜ் இச்சம்பவம் குறித்து வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் நாளுக்கு நாள் இரவில் நடந்து செல்பவர்களிடம் இது போன்ற வழிப்பறி நடப்பதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அருண்குமார், கிணத்துக்கடவு.